வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடு தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை
நீலகிரியில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு மற்றும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்


நீலகிரியில் வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு மற்றும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் உதகையில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் தனிப்பிரிவு, உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்து தீா்வு காண வேண்டும். வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
நிவாரண முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்வதோடு, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடா் நிகழ வாய்ப்புள்ள பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்த வேண்டும். சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்துவதற்குத் தேவையான இயந்திரங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் சச்சின் துகாராம் போஸ்லே, மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஜெயராமன், உதகை சாா் ஆட்சியா் மோனிகா ரானா, குன்னூா் சாா் ஆட்சியா் தீபனா விஷ்வேஸ்வரி, கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...