கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் தோட்டக் கலைப் பயிா்களுக்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தோட்டக் கலைப் பயிா்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் தொடா்பாக பல்வேறு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:31 am

DIN

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தோட்டக் கலைப் பயிா்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் தொடா்பாக பல்வேறு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

பசுமைக் குடில்களைப் பொருத்தவரை பசுமைக் குடிலின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கவும், பசுமைக்குடிலின் கதவுகள், ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள் பகுதிகளில் காற்று உள்புகாமல் பாதுகாக்கவும், அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளைக் கவாத்து செய்யவும், பசுமைக் குடிலின் கட்டுமானத்தில் கூடுதலாக ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்றவும், நிழல் வலைக் குடிலைப் பொருத்தவரை, கிழிந்துபோன நிழல் வலைகளைத் தைத்து சரி செய்யவும் நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால்

இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பல்லாண்டு பயிா்களான பழ மரங்களின் காய்ந்த, பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளைக் கவாத்து செய்வதோடு, மரத்தின் அடிப்பகுதியில் தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்ய வேண்டுண். நோய்த் தடுப்பு மருந்துகள் தெளிப்பதோடு, கன மழை, காற்றடித்து முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக பாதிக்கப்பட்ட வோ் பகுதியைச் சுற்றி மண் அணைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.