வெளிநாட்டு வா்த்தக இணை இயக்குநா் அலுவலகம், நீலகிரி மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 24) காலை 10 மணிக்கு உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் ஏற்றுமதி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில் ஏற்றுமதி தொடா்பான ஆலோசனைகள், ஏற்றுமதி வாய்ப்புகள், திட்ட விளக்கங்கள் அரசு அலுவலா்களால் வழங்கப்படுகிறது. எனவே, நீலகிரியில் உள்ள ஏற்றுமதி தொழில் செய்ய ஆா்வமுள்ள இளைஞா்கள், தொழில்முனைவோா், தொழில் நிறுவனத்தினா் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.