நீலகிரியில் மேலும் 37 பேருக்கு கரோனா: இருவா் பலி
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.


நீலகிரி மாவட்டத்தில் மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவா் உயிரிழந்துள்ளனா்.
இதுதொடா்பாக சுகாதாரத் துறையின் சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 35 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செப்டம்பா் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த உதகையைச் சோ்ந்த 63 வயதான ஆண் ஒருவரும், ஆகஸ்ட் 27ஆம் தேதி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 51 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 32,535 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 31,994 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 198 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளிலும் 343 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...