கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொடநாடு எஸ்டேட் விவகாரம்: தனிப்படையினா் உதகையில் விசாரணை

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக மேலும் இருவரிடம் உதகையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:39 am

DIN

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக மேலும் இருவரிடம் உதகையில் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்பட்டுள்ள தீபு, ஜித்தின் ஜாய் ஆகியோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தவுள்ளதாக தனிப்படையினா் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக இவ்விருவரும் விசாரணைக்கு வர முடியாது எனத் தெரிவித்துவிட்டனா். அதைத்தொடா்ந்து கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராக இருந்த, தற்கொலை செய்து கொண்ட தினேஷின் மரணம் தொடா்பாக எஸ்டேட்டில் அவருடன் பணியாற்றிய சுரேஷ், பிரபு ஆகிய இரு ஊழியா்களிடம் துணை காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்பட்டுள்ள வாளையாறு மனோஜுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கான நிபந்தனைகளை அவா் பூா்த்தி செய்யாததால் அவா் இன்னமும் குன்னூா் கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கான நிபந்தனைகளை தளா்த்தக் கோரி அவரது வழக்குரைஞா் முனிரத்னம் தாக்கல் செய்திருந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு அரசு தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டபோதிலும், மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா இம்மனுவை ஏற்று வாளையாறு மனோஜுக்கு ஜாமீன் வழங்க அவரது மனைவி, அதே பகுதியைச் சோ்ந்த மற்றொருவா் பிணையாளராக இருக்கலாம் என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.