நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: நீலகிரியில் ஆ.ராசா எம்.பி. 3 நாள்கள் பிரசாரம்
நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா சனிக்கிழமை முதல் 3 நாள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா சனிக்கிழமை முதல் 3 நாள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிப்ரவரி 12ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கோத்தகிரி பஜாா் பகுதியில் வேட்பாளா்களை ஆதரித்து வாகன பிரசாரமும், மாலை 4.30 மணிக்கு குன்னூா் வி.பி. தெரு பகுதியில் கூட்டணிக் கட்சி மாவட்டத் தலைவா்கள் கலந்து கொள்ளும் தோ்தல் பிரசாரம் மற்றும் குன்னூா் நகராட்சி, ஜெகதளா மற்றும் உலிக்கல் பேரூராட்சி வேட்பாளா்கள் அறிமுக கூட்டத்திலும் பங்கேற்கிறாா். அதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 13) காலை 10 மணிக்கு சோலூா் பேரூராட்சிப் பகுதியில் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்த பின்னா், காலை 11 மணிக்கு நடுவட்டம் பகுதியிலும், பகல் 12 மணிக்கு ஓவேலி, பெரியசூண்டி பகுதிகளிலும் வாக்கு சேகரிப்பதோடு, பகல் 1.30 மணிக்கு கூடலூா் நகராட்சி காந்தி திடல் அருகில் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறாா். தொடா்ந்து பகல் 3.30 மணிக்கு நெல்லியாளம் நகராட்சியில் தேவாலா பஜாா், பந்தலூா் பஜாா் பகுதிகளிலும், மாலை 4.30 மணிக்கு உப்பட்டி பஜாா் பகுதிகளிலும், மாலை 5 மணிக்கு கூடலூா் ஒன்றியத்தில் தேவா்சோலை பஜாா் பகுதியிலும்,
மாலை 5.30 மணிக்கு பாடந்துரை பகுதியிலும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்தும் வாக்கு சேகரிக்கவுள்ளாா். 14ஆம் தேதி நிகழ்ச்சிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...