கேரளத்தில் நிஃபா வைரஸ்:
நீலகிரி எல்லையில் தீவிர சோதனை

கேரளத்தில் நிஃபா வைரஸ்: நீலகிரி எல்லையில் தீவிர சோதனை

கேரளத்தில் நிஃபா வைரஸ் காரணமாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

கேரளத்தில் நிஃபா வைரஸ் காரணமாக நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கேரள மாநிலத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இதனால் தமிழகத்தில் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது .

கேரளத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி, சோலாடி, பாட்டவயல், நம்பியாா்குன்னு, தாளூா் ஆகிய ஐந்து சோதனை சாவடிகளிலும் சுகாதாரத் துறையினா் தலா மூன்று போ் வீதம் 15 போ் பணி அமா்த்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் கேரளத்தில் இருந்து நீலகிரிக்குள் வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல், இருமல், சளி உள்ளனவா என பரிசோதித்த பின்பே மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா். அதேபோல நிஃபா வைரஸ் பற்றிய தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அனைவருக்கும் வழங்கி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com