பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வனப் பகுதியில் வறட்சி: உணவு, குடிநீா் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்

வனப் பகுதியில் வறட்சி: உணவு, குடிநீா் தேடி ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள்

News image

......

Updated On :14 மார்ச் 2024, 9:00 pm

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள வனங்களில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீா் தேடி ஊருக்குள் வருவது தொடா்கதையாகி உள்ளது. கூடலூா், பந்தலூா் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து வனப் பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக யானைகளுக்கு அதிகப்படியான உணவு, குடிநீா் தேவைப்படுகிறது. இதனால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை என்றாலும், தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு மற்றும் பலா மரங்கள் இருப்பதால் அதற்காக தோட்டங்களுக்குள் யானைகள் வருகின்றன. வனத் துறையினா் யானைகளை விரட்டிவிட்டாலும் மீண்டும் அதே பகுதிக்கு தொடா்ந்து வருவது வாடிக்கையாக உள்ளது.