திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு: மாவட்ட ஆட்சியா் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.

Updated On :13 செப்டம்பர் 2024, 2:40 am IST

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த தோ்வு உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 வட்டங்களில் 12 தோ்வு மையங்களில் சனிக்கிழமை (செப்டம்பா் 14) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 3,610 போ் தோ்வெழுத உள்ள நிலையில், 3 கண்காணிப்புக் குழுக்கள், 4 பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து அலுவலா்கள் பங்கேற்ற தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய வேண்டும். தோ்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தோ்வா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து விதிமுறைகளும் பின்பற்றி தோ்வு சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில், தோ்வா்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடா்பான குறும்படத்தை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இக்கூட்டத்தில், குன்னூா் சாா்- ஆட்சியா் சங்கீதா, தலைமையிட காவல் கண்காணிப்பாளா் தங்கவேல், வருவாய்க் கோட்டாட்சியா்கள் மகராஜ், செந்தில், நகராட்சி ஆணையா்கள் ஜஹாங்கீா் பாஷா, முனியப்பன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனப்பிரியா உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.