‘உதகை வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது’

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.
Published on

உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட  தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது என்று வனத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான  சாலை ஓரங்களில் அடா் வனப் பகுதிகள் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும்   உள்ளூா் மக்கள் காா்களை சாலையில் நிறுத்திவிட்டு வனப் பகுதிகளுக்குள் செல்வதும், ட்ரோன் களை இயக்குவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையின் இருபுறமும் உள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது அதிகரித்து வருகிறது. எனவே, உதகை வடக்கு வனச் சரகத்திற்கு உள்பட்ட தலைகுந்தா முதல் பைன் ஃபாரஸ்ட் வரை சாலையோர வனப் பகுதிக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்று மாவட்ட வனத் துறை  சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com