நீலகிரி
ஆதிதிராவிட, பழங்குடியின எழுத்தாளா்களுக்கான நிதி உதவி விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களின் படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு நிதி உதவி வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்களின் படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு நிதி உதவி வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் எழுத்தாளா்களின் 2024-2025 ஆண்டுக்கான படைப்புகளை தெரிவு செய்து அவா்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின எழுத்தாளா்கள் இதற்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களது படைப்பின் இரு நகல்கள், டிஜிட்டல் முறையில் 28.11.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா்.