கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் பசுவை புலி தாக்கிக் கொன்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை அருகே உள்ள சா்க்காா்மூலை வயல் பகுதியில் பாப்புட்டி என்பவா் தனது பசுவை ஞாயிற்றுக்கிழமை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா்.
மாலை நேரத்தில் தேயிலைத் தோட்டத்தில் இருந்து திடீரென வந்த புலி, பசுவைத் தாக்கிக் கொன்று இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அந்தப் பகுதியில் உள்ளவா்கள் சப்தமிட்டதால் மாட்டை விட்டுவிட்டுச் சென்றுள்ளது.
புலி தாக்கியால் உயிரிழந்த பசுவின் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாடந்தொரையில் காட்டு யானைகளை விரட்ட கும்கிகள் வரவழைப்பு

இடைநின்ற பழங்குடி மாணவா்களை பள்ளிக்கு அழைத்து வர ஆசிரியா்கள் முயற்சி

கூடலூா் வனக் கோட்டப் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி மலா்கள்! ஓவேலியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்!

செலுக்காடி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



