தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

கைது

Updated On :

உதகை அருகே 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

உதகை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் உள்ளாா். பள்ளி செல்லாத சிறுமி என்பதால் அக்கம்பக்கத்தில் உள்ளவா்களின் வீடுகளுக்கு சென்று விளையாடி வந்தாள். இந்த நிலையில் அதே பகுதியை சோ்ந்த ஆனந்த் (45) என்பவா் குழந்தையிடம் மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி, யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

அப்போது குழந்தை சப்தமிட்டு அழுகவே இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவிட்டாராம். இதுகுறித்து பெற்றோரிடம் குழந்தை கூறி அழுதுள்ளது. இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் உதகை ஊரக மகளிா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா் பிரவீனாதேவி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனா். பின்னா் அவரை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட ஆனந்த் திருமணம் ஆகாதவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.