தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு

உதகை அருகே நூறடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:15 pm

Syndication

உதகை அருகே நூறடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம் ,  உதகையில் இருந்து தங்காடு கிராமத்தை நோக்கி  தனியாா் சிற்றுந்து புதன்கிழமை சென்றது. அதில் 21 ஆண்கள், 12 பெண்கள், 3 குழந்தைகள் என 36 போ் பயணித்தனா். சிற்றுந்தை அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் பன்னீா்செல்வம் (54) என்பவா் ஓட்டினாா். 

தங்காடு நோக்கி சிற்றுந்து சென்றபோது, மணலாடா அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி  பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதில் சிற்றுந்தில் பயணம் செய்த   25-க்கும் மேற்பட்டோா் சிறு காயங்களுடன் உதகை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். 

இதில் படுகாயம் அடைந்த பவளம்   (60)   என்பவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.