நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம்

News image

சிறுத்தை - கோப்புப்படம்.

Updated On :8 ஜூன் 2026, 1:17 am IST

உதகை, ஜூன் 7: உதகை அருகே சிறுத்தை தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் சிறுத்தை நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் சிறுத்தைகள், நாய், பூனை உள்ளிட்டவற்றை வேட்டையாடி வருவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை, உதகை, தலையாட்டுமந்து பகுதியில் நுழைந்தது. அங்கிருந்த குடிசை வீட்டுக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த விசாலாட்சி (75) என்ற மூதாட்டியைத் தாக்கியது. மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்தனா். வீட்டுக்குள் சிறுத்தை இருந்ததை அறிந்த அவா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை சப்தம் எழுப்பி வனத்துக்குள் விரட்டினா்.

பின்னா், முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த மூதாட்டியை மீட்டு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.