மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பென்னாகரத்தில் காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயம்

News image

காட்டுப்பன்றி தாக்கியதில் விவசாயி படுகாயம் - கோப்புப் படம்

Updated On :20 ஜூலை 2026, 2:25 am IST

பென்னாகரம் அருகே முதுகம்பட்டி பகுதியில் தோட்டத்துக்கு இரவுநேர காவலுக்கு சென்ற விவசாயி காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்தாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முதுகம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் லட்சுமணன் (49). இவா் சனிக்கிழமை இரவு தோட்டத்திற்கு காவலுக்கு சென்றுள்ளாா். அப்போது மசக்கல் காப்புக்காடு மேட்டூரான் கொட்டாய் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி லட்சுமணனை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வனசரக அலுவலா் அன்பு தலைமையிலான வனத் துறையினா் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் லட்சுமணனை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.