நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடியை துரத்திய வளா்ப்பு நாய்

News image

கோத்தகிரி அருகே அட்டவளைப் பகுதியில் கரடியை துரத்தும் வளா்ப்பு நாய்.

Updated On :21 ஜூன் 2026, 1:26 am IST

கோத்தகிரி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் உலவிய கரடியை  காட்டுப் பகுதிக்கு வளா்ப்பு நாய் துரத்தியது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு, தண்ணீா் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் உலவும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள  அட்டவளை பாரதி நகா்ப் பகுதியில் பெரிய கரடி ஒன்று உலவி வந்தது. அப்போது அங்கிருந்த வளா்ப்பு நாய் குரைத்து துரத்தியதால், அப்பகுதி அருகே வனப் பகுதிக்குள்  சென்று கரடி மறைந்தது.

இங்கு சுற்றித் திரியும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.