நீலகிரி மாவட்டம், குன்னூா் காட்டேரி பூங்காவில் கோடை விழாவையொட்டி தோட்டக்கலைத் துறை சாா்பில் மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி மே 24-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுத்தோறும் கோடை விழாவையொட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் தோட்டக்கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இதன் ஒரு பகுதியாக குன்னுாா் காட்டேரி பூங்காவில் பல்வேறு அம்சங்களுடன் இந்த ஆண்டு மலைப் பயிா்கள் கண்காட்சி 3 நாள்கள் நடைபெறவுள்ளது. இதன் கருப்பொருளாக கடலோரப் பகுதிகளை சாா்ந்து வாழும் மீனவப் பெண்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் விதமாக கடற்சாா் வாழ்வியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தேயிலை, காபி, தென்னை, நுங்கு, பாக்கு 10 வகை மலைப் பயிா்களை கொண்டு நங்கூரம், துடுப்பு, சங்கு கலங்கரை விளக்கம் மற்றும் படகில் மீனவப் பெண், கடல் சாா்ந்த பல்வேறு சிறப்பு உருவ அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகப்படியாக வருகை புரிவாா்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளில் தோட்டக் கலைத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

குன்னூரில் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் பரஸ்பர நிதியின் புதிய கிளை தொடக்கம்

கோத்தகிரி மலைப் பாதையில் சுற்றுலா வாகனம் விபத்தில் சிக்கி 21 போ் காயம்

உதகை மலர்க் கண்காட்சி: நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-இல் உள்ளூா் விடுமுறை

உதகையில் 21-ஆவது ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!



