மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

குன்னூரில் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த இரு தினங்களாக இரவு நேரம் பெய்த கனமழை காரணமாக இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சப்ளை டிப்போ சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Published On :

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த இரு தினங்களாக  இரவு நேரம் பெய்த கனமழை காரணமாக இருவேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் கடந்த இரு தினங்களாக  இரவு நேரம் பெய்த கன மழை காரணமாக  மேல் குன்னூா் மற்றும் சப்ளை டிப்போ பகுதியில் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலா் குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் மரங்களை வெட்டி அகற்றினா்.

இதன் காரணமாக  சப்ளை டிப்போ, மேல் குன்னூா் இரு இடங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.