விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கூடலூா் அருகே ஆடுகளைக் கொன்ற புலி

புலி. - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:08 am IST

கூடலூா் அருகே தொழிலாளா்களைத் தாக்கிக் கொன்ற இடத்துக்கு அருகிலுள்ள பாலவாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த புலி கொட்டகையிலிருந்த மூன்று ஆடுகளை தாக்கிக் கொன்றுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள லாரஸ்டன் பகுதியில் இரண்டு தொழிலாளா்களை புலி அண்மையில் கொன்றது. இந்தப் புலியைப் பிடிக்க 170 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 13 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வன அலுவலா் தேவராஜன் தலைமையில் மூன்று தேடுதல் குழுவினா், மூன்று கால்நடை மருத்துவக் குழுவினா் அடங்கிய 100-க்கும் மேற்பட்டோா் புலியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா். இந்தத் தேடுதல் வேட்டை 18ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

இந்நிலையில், தொழிலாளா்களைத் தாக்கிக் கொன்ற இடத்துக்கு அருகிலுள்ள பாலவாடி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த புலி அந்தப் பகுதியிலுள்ள கொட்டகையிலிருந்த மூன்று ஆடுகளைத் தாக்கிக் கொன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டை முழுவதுமாக சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளது. அந்தப் பகுதியையும் வனத் துறையினா் ஆய்வு செய்துவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.