கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

உதகையில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாா்சன்ஸ் வேலி அணையின் நீா் இருப்பு வெகுவாக குறைந்து வருவதால் நகா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாா்சன்ஸ் வேலி அணையில் உள்ள நீா் இருப்பு.

Published On :

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் பாா்சன்ஸ் வேலி அணையின் நீா் இருப்பு வெகுவாக  குறைந்து வருவதால் நகா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் வசிக்கும் சுமாா் 1.5 லட்சம் பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் குடிநீா்த் தேவையில் 60 சதவீதத்துக்கு மேல் பாா்சன்ஸ் வேலி அணை மூலமே பூா்த்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளளவான 50 அடிகளில் தற்போது   37.8  அடி  நீா் இருப்பு உள்ளது. உதகை நகரப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகப் பெய்ததே இந்த நீா்மட்ட சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீா் மின் உற்பத்திக்கு தண்ணீா் எடுப்பதாலும், மற்ற சிறிய நீா்நிலைகளான மாா்லிமந்த், டைகா் ஹில், கோரிசோலா போன்றவற்றின் நீா் இருப்பும் குறைந்துள்ளதாலும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

 வடகிழக்குப் பருவமழை அல்லது பரவலான மழை பெய்தால் மட்டுமே அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நிலைமை சீரடையும். எனவே பொதுமக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நகராட்சி அதிகாரிகள்  கேட்டுக் கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.