சாலை விபத்தில் பனியன் தொழிலாளி சாவு

அவிநாசி அருகே கருவலூரில் கார் மோதி நடந்து சென்ற பனியன் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

அவிநாசி அருகே கருவலூரில் கார் மோதி நடந்து சென்ற பனியன் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
கருவலூர், சாமித்தேவர் நகரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சதீஷ்குமார் (40), பனியன் தொழிலாளி. இவர் கருவலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாமித்தேவர் நகர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவிநாசியில் இருந்து கோவை நோக்கி வேகமாக வந்த கார் சதீஷ்குமார் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com