2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

எஸ்.வி.புரத்தில் பூட்டிய வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

உடுமலை, எஸ்.வி.புரத்தில், பூட்டியிருந்த வீட்டிலிருந்து  30 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயுள்ளன.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:07 am

DIN

உடுமலை, எஸ்.வி.புரத்தில், பூட்டியிருந்த வீட்டிலிருந்து  30 பவுன் நகை மற்றும் ரூ. 20,000 ரொக்கம் உள்ளிட்டவை திருடு போயுள்ளன.
உடுமலை நகரை ஒட்டியுள்ள பகுதியான எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், அதே பகுதியில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். தனது குடும்பத்துடன் வெளியூர் சென்ற செல்வராஜ்,  புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைந்திருப்பதைக் கண்டு செல்வராஜ் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகை,   ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. தகவல் கிடைத்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். திருப்பூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.