வெள்ளக்கோவிலில் அத்து மீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் கடைக்காரர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விளம்பர பேனர்கள் வைக்க நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் காவல் துறை, உள்ளாட்சி நிர்வாகங்களைக் கண்டுகொள்ளாமல், எவ்வித அனுமதியும் பெறாமல் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
வெள்ளக்கோவில் நகரில், மக்கள் அதிகம் கூடும் முத்தூர் பிரிவு, நான்கு சாலை சந்திப்பில் வணிக வளாகங்கள் முன்பு கண்ணீர் அஞ்சலி, கோயில் விசேஷங்கள், அரசியல் கட்சியினரின் பெரிய அளவு பேனர்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, நான்கு சாலை சந்திப்பில் உள்ள வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள தம்பி என்பவர் கூறியதாவது:
கடைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதால் கடை இருப்பதே தெரியாமல் வியாபாரம் பாதிப்புக்குள்ளாகிறது.
நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் பல வாரங்களுக்குப் பேனர்கள் அகற்றப்படுவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பையில் ஹைதி அணியின் சீருடைக்குத் தடை விதித்த ஃபிஃபா!

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி
இந்தியக் கப்பல்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் கூறுவது ஆதாரமற்றது: ஈரான்

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


