உடுமலை அருகே பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் பாதியில் கைவிடப்பட்டிருந்த சாலை சீரமைப்புப் பணி புதன்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.
உடுமலை ஒன்றியம், அமராவதியில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்து கரட்டுப்பதி செட்டில்மெண்ட் வரையிலான சுமார் 2 கிலோ மீட்டர் சாலை வனப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த சாலை சேமதடைந்து காணப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் சாலையைச் செப்பனிடும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் உள்ள இந்தச் சாலையைச் சீரமைக்க முறைப்படி வனத் துறையிடம் அனுமதி பெறவில்லை எனக் கூறி, சாலையைச் சீரமைக்க வனத் துறை அதிகாரிகள் தடைவித்திருந்தனர்.
இந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், வனத் துறையினர் அனுமதி அளித்துள்ளதை அடுத்து சாலை சீரமைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்!

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடும் கீர்த்தி சுரேஷ்?

தொடரும் ரஷியா - உக்ரைன் போர்; டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கும் ஜெலென்ஸ்கி !
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


