திருப்பூரில் இளநீர் வியாபாரியைக் கொலை செய்ய முயன்றதாக 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகே இளநீர்க் கடை வைத்திருப்பவர் இளையபாரதி (35). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர் அரிவாளால்
இளையபாரதியை வெட்டிவிட்டுத் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்குள்ள சோதனைச் சாவடி போலீஸார் அந்த 5 பேரை பிடிக்க முயற்சித்தனர். இதில், 2 பேர் மட்டும் பிடிபட்டனர்.
இது குறித்து மாவடத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீஸார் சோதனை நடத்திய போது காரில் தப்பிச் சென்ற 3 பேர் பிடிட்டனர். பிடிபட்டவர்கள் முருகன்(ஆம்புலன்ஸ் ஓட்டுநர்), காளிமுத்து, ஜெய்கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரியவந்தது. இதில், முருகனுக்கும், இளையபாரதிக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இளைய பாரதியைக் கொலை செய்வதற்காக முருகன் மற்ற 4 பேரை கூலிப்படியாக அமர்த்தி கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

BJP - DMK நட்புறவா? அரசியலில் நண்பன், எதிரி கிடையாது! கனிமொழி சோமு

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 9 - நேரலை!

புதுவை காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ண விருது! மத்திய அமைச்சர் அமித் ஷா வழங்கினார்!

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


