இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இளநீர் வியாபாரியைக் கொலை செய்ய முயன்ற 5 பேர் கைது

திருப்பூரில் இளநீர் வியாபாரியைக் கொலை செய்ய முயன்றதாக 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருப்பூரில் இளநீர் வியாபாரியைக் கொலை செய்ய முயன்றதாக 5 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகே இளநீர்க் கடை வைத்திருப்பவர் இளையபாரதி (35). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது கடை முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காரில் வந்த 5 பேர் அரிவாளால்
இளையபாரதியை வெட்டிவிட்டுத் தப்பிவிட்டனர்.  இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்குள்ள சோதனைச் சாவடி போலீஸார் அந்த 5 பேரை பிடிக்க முயற்சித்தனர். இதில், 2 பேர் மட்டும் பிடிபட்டனர்.
இது குறித்து மாவடத்தில் உள்ள அனைத்துக் காவல்  நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், திருப்பூர் எம்.எஸ். நகரில் போலீஸார் சோதனை நடத்திய போது காரில் தப்பிச் சென்ற 3 பேர் பிடிட்டனர். பிடிபட்டவர்கள் முருகன்(ஆம்புலன்ஸ் ஓட்டுநர்), காளிமுத்து, ஜெய்கணேஷ், மணிகண்டன், இம்ரான் என்பது தெரியவந்தது. இதில், முருகனுக்கும், இளையபாரதிக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் இளைய பாரதியைக் கொலை செய்வதற்காக முருகன் மற்ற 4 பேரை கூலிப்படியாக அமர்த்தி கொலை செய்ய முயற்சித்ததும் தெரியவந்துள்ளது.
இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரைக் கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.