/

வெள்ளக்கோவிலில் இலவச அமரர் ஊர்தி சேவை வழங்க வேண்டும்: ஏழை மக்கள் எதிர்பார்ப்பு

வெள்ளக்கோவிலில் இலவச அமரர் ஊர்தி சேவை கிடைக்க வேண்டும் என ஏழை, எளிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:53 am IST

வெள்ளக்கோவிலில் இலவச அமரர் ஊர்தி சேவை கிடைக்க வேண்டும் என ஏழை, எளிய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வெள்ளக்கோவிலில் உயிரிழந்தவர்களை பெரும்பாலும் உள்ளூர் மயானத்தில் அடக்கம் செய்கின்றனர். மேலும்,  ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கணபதிபாளையத்தில் உள்ள நகராட்சி எரிவாயு மயானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அனைத்துத் தரப்பினரும் தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நாடி வருகின்றனர். 
ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை ரூ.1,300, கூடுதலான தொலைவுக்கு அதிகத் தொகை எனக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச் செலவை ஏழை, எளிய மக்களால் ஈடுகட்ட முடிவதில்லை. எனவே, தனியார் அமைப்புகளோ, தொண்டு நிறுவனங்களோ இலவச அமரர் ஊர்தி சேவையை வழங்க முன்வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.