இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரத்து 802 மாணவ, மாணவியர் பங்கேற்று  தேர்வெழுதுகின்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 1:36 am

DIN

தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரத்து 802 மாணவ, மாணவியர் பங்கேற்று  தேர்வெழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம்  தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 
இத்தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 77 தேர்வு மையங்களில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11,212 மாணவர்களும்,  13,607 மாணவிகளும் என மொத்தம் 24,819 பேர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 983 பேர் எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 77 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர் கூடுதல் துறை அலுவலர்களாக 87 ஆசிரியர்களும்,  அறைக் கண்காணிப்பாளர்களாக 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர்கள் தலைமைகளில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுக்காக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 176 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்ய பதிவேடு ஒன்றும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் பெட்டியும் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.