சர்வதேச சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தென் கொரியா, சர்வதேச ஐக்கிய நாடுகள் மற்றும் உலக தற்காப்புக் கலைகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து 15ஆவது உலக தற்காப்பு கலைகள் சாம்பியன்ஷிப் போட்டிகளை அக்டோபர் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடத்தியன.
தென் கொரியாவில் சியோலில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் தற்காப்புக் கலை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இயங்கி வரும் பகத்சிங் தற்காப்புக் கலைகள் பள்ளிச் செயலாளர் எம்.வினோத்குமார் மற்றும் 10 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில், வீரமணி ஜீவா, கிருஷ்ணன் விசாலி, ரவிச்சந்திரன், நந்தகோபால் ஆகியோர் சிறப்பிடம் பெற்றனர். உலக தற்காப்புக் கலைகள் கூட்டமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் சிறப்பிடம் பெற்ற சிலம்பம் வீரர், வீராங்கனைகளைப் பாராட்டினர். பொள்ளாச்சி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!





