காங்கயத்தில் உள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் காங்கயம் கிளை, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளி ஆகியின சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் காங்கயம் கிளை துணை மேலாளர் பார்த்திபன் கலந்து கொண்டு, லஞ்சம் ஒழிப்போம்-புதிய பாரதம் படைப்போம் என்னும் தலைப்பில் பேசினார்.
பாரத ஸ்டேட் வங்கியின் சிறப்புநிலை அலுவலர் ராம்மோகன், வங்கியின் வாடிக்கையாளர்கள் செல்லிடப்பேசி வழியாக அனுப்பச் சொல்லும் எந்த ஒரு கடவு எண்ணையும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.
பின்னர், மாணவர்கள் அனைவரும் லஞ்சம் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக 11ஆம் வகுப்பு மாணவி வி.நீலாம்பரி வரவேற்றார்.
பி.பிரியதர்ஷினி நன்றி கூறினார். பள்ளி முதல்வர், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆப்கனில் நிலநடுக்கம்! ஜம்மு - காஷ்மீர், தில்லி வரை உணரப்பட்ட அதிர்வு!

டி20 உலகக் கோப்பை: அயர்லாந்துக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

லண்டனில் தெலங்கானா மாணவர் சடலமாக மீட்பு: உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை!





