பல்லடம் அருகே கிரிச்சிபாளையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக் காதலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பல்லடம் அருகேயுள்ள எலவந்தி வடுகபாளையம் ஊராட்சி கிரிச்சிபாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவரின் வீட்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் கோவை மாவட்டம், அன்னூர் சவக்கட்டுபாளையத்தைச் சேர்ந்த லதா (37) என்பதும், இவரது கணவர் தாராபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் எனவும், இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த
5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்தனர்.
கணவனைவிட்டுப் பிரிந்த லதா பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறுப் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும், அதே நூற்பாலையில் பிட்டராக வேலை செய்து வந்த செந்தில் (40) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாம். இதன், காரணமாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
செந்தில் மதுப் பழகத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு செந்தில் மது போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது, ஆவேசம் அடைந்த செந்தில் மரக்கட்டையால் லதாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில், லதா ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். லதாவின் சடலத்தை பேரலில் மண் போட்டு மூடி யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அதன் மேல் காலி அட்டை பெட்டியை வைத்து மூடி வைத்து விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்துள்ளார். பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்கிணறு பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்தார். குழந்தையை தாராபுரம் சின்னகாம்பாளையத்தில் உள்ள தனது தாயாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவந்தது.
காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான தனிப்படை போலீஸார் துத்தாரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த செந்திலை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமுறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


