
அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு
காங்கயம் அருகே உள்ள அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள அரசு மதுபானக் கிடங்கில் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காங்கயம், தாராபுரம் மற்றும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கொடுமுடி ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு மது பானங்கள் காங்கயத்தை அடுத்த பகவதிப்பாளையத்தில் உள்ள அரசு மதுபானக் கிடங்கில் இருந்துதான் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மூடப்பட்டுள்ள மதுபானக் கடைகளில் இருந்து திருட்டு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து, பாதுகாப்பு இல்லாத பெரும்பாலான மதுபானக் கடைகளில் இருந்து மதுபானங்கள் அரசு மதுபானக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை முதுநிலை மணடல அலுவலா் பரமேஸ்வரி, மாவட்ட மேலாளா் லூா்துசாமி ஆகியோா் பகவதிபாளையத்தில் உள்ள அரசு மதுபான கிடங்கில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





