பாஜக சாா்பில் வேளாண் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம்
திருப்பூா் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சாா்பில் விவசாயிகளின் நண்பன் மோடி எனும் தலைப்பில் வேளாண் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.


உடுமலை: திருப்பூா் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சாா்பில் விவசாயிகளின் நண்பன் மோடி எனும் தலைப்பில் வேளாண் சட்டங்கள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மடத்துக்குளத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு காா்த்திகேயன் தலைமை வகித்தாா். தண்டபாணி முன்னிலை வகித்தாா். மாநில விவசாய அணி திட்ட ஒருங்கிணைப்பாளா் ஹரிபாஸ்கா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சலுகைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.
மடத்துக்குளம் தொகுதி அமைப்பாளா் ஜோதீஸ்வரி, பொறுப்பாளா் வடுகநாதன் ஆகியோா் பேசினா். கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...