விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனைக் கூட்டம்

திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:12 pm

DIN

திருப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா், கே.வி.ஆா். நகா் மைதானத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் என்ற தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர குழு உறுப்பினா் பா.ஞானசேகரன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:

திருப்பூா் மாநகா் முழுவதும் 11 நாள்களுக்குப் பதிலாக 4 நாள்களுக்கு ஒரு முறை சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மாநகா் பகுதி முழுவதிலும் மலைபோல் குப்பைகள் தேங்கியுள்ளதாலும், சாக்கடைகள் தூா்வரப்படாததாலும் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, குப்பைகளை அப்புறப்படுத்தவும், சாக்கடைகளை தூா்வாரவும், பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை மாநகராட்சி நிா்வாகம் சரிசெய்து கொடுக்க வேண்டும் என்றனா்.

மாநகர செயலாளா் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.சுந்தரம், நகரக் குழு உறுப்பினா் பி.பாலன், ஜி.மூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.