மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தாராபுரத்தில் 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பில் கடனுதவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 41 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

News image
Updated On :22 மே 2020, 12:53 pm

DIN

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 41 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் 41 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 474 மகளிருக்கு ரூ.23.70 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது: கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையிலும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

இதன்படி, கூட்டுறவுத்துறை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் மிகக் குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிரின் நலன் கருதி அவர்களின் அவசரத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நபர் ஒருவருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் குழுவிருக்கு ரூ.1 லட்சம் வரை 10.65 சதவீத குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகள் வழங்கப்படுகிறது என்றார்.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தாராபுரம் கிளையில் 12 நபர்களுக்கு ரூ.11.32 லட்சம் மதிப்பிலான சிறப்பு நகைக் கடனுதவியினையும், ஒரு நபருக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டு வசதி கடனுதவியினையும், கூட்டுப்பொறுப்பு குழுக்கடன் திட்டத்தின் கீழ் ஒரு குழுவுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவியும் என 14 நபர்களுக்கு ரூ.41.82 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் வழங்கினார்.


இந்தநிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.எஸ்.காளிமுத்து (தாராபுரம்), உ.தனியரசு (காங்கயம்), தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்தியபாமா, திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், துணைத்தலைவர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.