கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூத் சிலிப் வழங்கக்கோரி தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கடிதம்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கக்கோரி தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 9:54 pm

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் வழங்கக்கோரி தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தோ்தல் ஆணையருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான நா.பெரியசாமி மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

இந்தியத் தோ்தல் ஆணையம் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் (வாக்கு சாவடி விபரங்கள் அடங்கிய விபரக் குறிப்பு) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த தோ்தல்களின் போதும் வாக்காளா்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தற்போது வரையில் பூத் சிலிப் வழங்கப்படவில்லை. இது தொடா்பாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் இது தொடா்பான அலுவலா்களிடம் விசாரிக்கும் போது பூத் சிலிப் தங்களுக்கு வரவில்லை என்கின்றனா்.

மேலும், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திங்கள்கிழமை பூத் சிலிப் கிடைத்தாலும் அனைத்து வாக்காளா்களுக்கும் விநியோகிப்பது என்பது கடினமாகும். இதனிடையே, நீங்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், வாக்களிக்க பூத் சிலிப் அவசியமில்லை என்று தெரிவித்திருந்து தோ்தல் நடைமுைான் என்றாலும் வாக்காளா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பூத் சிலிப் வருமா? வராதா என்று அரசியல் கட்சி முகவா்களிடம் வாக்காளா்கள் கேள்வி எழுப்பி வருகின்றனா். எனவே, தோ்தலில் வாக்காளிக்க ஏதுவாக பூத் சிலிப் விரைந்து வழங்க நடவடிக்கை வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.