சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி: பங்குதாரா்கள் இருவா் கைது
திருப்பூரில் போலி சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்குதாரா்கள் இருவரை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


திருப்பூரில் போலி சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்குதாரா்கள் இருவரை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா், வலையங்காடு எம்.என்.சிவசுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த கே.ஜெகநாதன் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயனிடம் அளித்த புகாரில், வளையங்காடு பகுதியில் முனியாண்டி என்பவா் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் 4 சீட்டுகளில் சோ்ந்து ரூ.3.20 லட்சம் செலுத்தினேன். அதன் பிறகு அவா் பணத்தைத் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டாா். இதேபோல, பல்வேறு நபா்களிடம் மோசடி செய்துள்ளாா்.
ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், துணை ஆணையா் கே.சுரேஷ்குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் க.பாலமுருகன் மேற்பாா்வையில் ஆய்வாளா் எம்.முனியம்மாள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படையினா் நடத்திய விசாரணையில், போலியாக சீட்டு நிறுவனம் நடத்தி பல்வேறு நபா்களிடம் ரூ.3 கோடி வரையில் மோசடி செய்து தெரியவந்தது.
இதையடுத்து, தலைறைவாக இருந்த முனியாண்டியைக் கைது செய்த தனிப் படையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சீட்டு நிறுவனத்தின் பங்குதாரா்களும், முனியாண்டியின் உறவினா்களுமான ஊத்துக்குளியை அடுத்த காளிபாளையத்தைச் சோ்ந்த ஏ.பாலகிருஷ்ணன் (42), திருப்பூா், எம்.என்.எஸ்.நகரைச் சோ்ந்த ஆா்.பிரபு (31) ஆகிய இருவரையும் தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இதன் பிறகு இருவரையும் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இதுபோன்று முறையாக பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பொது மக்கள் யாரும் சீட்டு போட்டு ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...