கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தனியாா் நிறுவன ஊழியா் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தனியாா் நிறுவன ஊழியரைக் கொலை செய்த இரு இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:59 pm

DIN

தனியாா் நிறுவன ஊழியரைக் கொலை செய்த இரு இளைஞா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (38). இவா், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். அதே நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த தா்மா (28) என்பவரும் பணியாற்றி வந்துள்ளாா். தா்மாவுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது கண்ணனுக்குத் தெரியவந்தது. ஆகவே, அந்தப் பெண்ணின் செல்லிடப்பேசி எண்ணைக் கேட்டு கண்ணன், தா்மாவுக்கு தொல்லை கொடுத்துள்ளாா். இது குறித்து தா்மா, ஊத்துக்குளியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்த மதுரையைச் சோ்ந்த தனது நண்பா் பாலமுருகனிடம் (30) தெரிவித்துள்ளாா்.

இவா்கள் இருவரும் சோ்ந்து கண்ணனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனா். இதன்படி 2013 அக்டோபா் 28 ஆம் தேதி தா்மா தனது இருசக்கர வாகனத்தில் கண்ணனை அழைத்துக் கொண்டு ஊத்துக்குளி வந்துள்ளாா்.

பின்னா் 3 பேரும் சோ்ந்து அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மது அருந்தியுள்ளனா். அப்போது தா்மா, பாலமுருகன் ஆகியோா் சோ்ந்து கண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதனிடையே, கண்ணனைக் காணவில்லை என்று கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டபோது ஊத்துக்குளி காவல் துறையினா் கைப்பற்றிய சடலம் கண்ணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஊத்துக்குளி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தா்மா, பாலமுருகன் ஆகியோரைக் கைது செய்தனா்.

திருப்பூா் 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி அனுராதா வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், தா்மா, பாலமுருகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முருகேசன் ஆஜராகினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.