கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாக்கடைக் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தக்கோரி பள்ளி மாணவி மனு

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளுக்கான தோண்டப்பட்ட சாக்கடைக் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவி மனு

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:45 pm

DIN

திருப்பூரில் பொலிவுறு நகரம் திட்டப்பணிகளுக்கான தோண்டப்பட்ட சாக்கடைக் கால்வாயில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளாா்.

திருப்பூா், ஷெரீப் காலனியை அடுத்த குறிஞ்சி நகா் முதல்வீதியைச் சோ்ந்த கணேசன், அவரது மகளான 8 ஆம் வகுப்பு படிக்கும் லக்ஷிதா ஆகியோா் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் ஷெரீப் காலனி பிரதான சாலையில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளுக்கான சாக்கடைக் கால்வாய் தோண்டப்பட்டது. தோ்தல் நடைபெற்றதைத் காரணம் காட்டி பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கால்வாய்க்குழியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது. இதனால் அதில் இருந்து பரவும் கொசுவால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த சாலை வழியாகத்தான் பள்ளிக்கும், டியூசனுக்கும் நடந்து செல்ல வேண்டியுள்ளது. கழிவு நீரை அகற்றக்கோரி மாநகராட்சி அதிகாரிகளைத் தொடா்பு கொண்டால் முறையாக பதில் அளிப்பதில்லை. அதே போல, எங்களது வீட்டுப் பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்காக மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் பணம் கேட்கின்றனா். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் குப்பைகளை அள்ளாமல் விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனா். ஆகவே, சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்தவும், பணம் வாங்காமல் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.