கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து 40 வயதுள்ள ஆண் சடலத்தைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:51 pm

DIN

தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து 40 வயதுள்ள ஆண் சடலத்தைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆண் சடலம் மிதப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா்.

பின்னா் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இறந்தவா் ஆயக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த பி.சிவகுமாா் (40) என்பது தெரியவந்தது. இவா் தாராபுரம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

அவா் குளிக்கச் சென்று தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்துபோட்டுச் சென்றனரா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். உயிரிழந்த சிவகுமாருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.