தாராபுரம் அருகே சாலை விபத்தில் சகோதரர்கள் பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கார் மரத்தில் மோதியதில் சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர் வடக்கு நகரைச் சேர்ந்தவர் எம்.நரேன்(23), இவரது தம்பி சுரேன்(22), இவர்களது நண்பர்களான பொங்கலூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(22), திருப்பூரைச் சேர்ந்த எல்.நவீன்(22), எல்.லோகநாதன்(23) உள்ளிட்ட 5 பேரும் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக காரில் கொடைக்கானல் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | உத்தரப்பிரதேசத்தில் 6 கோடியைக் கடந்த கரோனா தடுப்பூசி பயன்பாடு
இதன் பிறகு காரில் மீண்டும் திருப்பூரை நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தனர். காரை நரேன் ஓட்டி வர மற்ற நான்கு பேரும் காரில் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கார் தாசாநாயக்கன்பட்டி அருகே வந்தபோது ஓட்டிநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நரேன், அவரது தம்பி சுரேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரி்ழந்தனர். இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ்குமார், நவீன், லோகநாதன் ஆகிய 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம்
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...