மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

திருப்பூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.
Updated On :6 டிசம்பர் 2021, 8:26 am

DIN

திருப்பூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்டிபிஐ கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்காட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். 
இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

அயோத்தியில் மீண்டும் இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்ட வேண்டும் என்றனர். இதனை அப்படியே திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஹிதாயத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன், மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.