சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்
திருப்பூா் மாநகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.


திருப்பூா் மாநகரில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு அக்கட்சியின் திருப்பூா் தெற்கு மாநகரச் செயலாளா் டி.ஜெயபால் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கட்சியினா் கூறியதாவது:
திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரம் திட்டம், 4 ஆவது குடிநீா்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக மூடப்படவில்லை. மேலும் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, திருப்பூரில் அனைத்து சாலைகளையும் முழுமையாக சீரமைக்க வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்த்தில், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.ராஜகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் 15 நாள்களுக்குள் குண்டும், குழியமாக உள்ள சாலைகள் சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...