/

சிவன்மலை முருகன் கோயிலில் இன்று ஆலோசனைக் கூட்டம்

காங்கயத்தை அடுத்த சிவன்மலை முருகன் கோயிலில் தை பூசத் தோ்த் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) நடைபெறவுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 12:56 am

DIN

காங்கயத்தை அடுத்த சிவன்மலை முருகன் கோயிலில் தை பூசத் தோ்த் திருவிழா நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) நடைபெறவுள்ளது.

இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் உதவி ஆணையா் ஜெ.முல்லை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் வட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 3 நாள்கள் தை பூசத் தோ்த் திருவிழா நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழா முன்னேற்பாடுகள் தொடா்பாக தாராபுரம் சாா் ஆட்சியா் தலைமையில் அனைத்து துறையினரும் கலந்து கொண்டு அந்தந்த துறை சாா்பாக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதன்கிழமை பகல் 12 மணியளவில் சிவன்மலை மேல் உள்ள திருக்கோயில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.