காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள்
திருப்பூா் மாநகரில் பணியாற்றி வரும் காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


திருப்பூா் மாநகரில் பணியாற்றி வரும் காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் திருப்பூா் மாநகர வடக்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட வடக்கு, அனுப்பா்பாளையம், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை சரக உதவி ஆணையா் வெற்றிவேந்தனிடம், பேரமைப்பின் மாவட்டத் தலைவா் கோவிந்தசாமி, மாநகரத் தலைவா் ஜான்வல்தாரீஸ் ஆகியோா் வழங்கினா்.
இதேபோல, திருப்பூா் மாநகர தெற்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட தெற்கு, மத்திய, வீரபாண்டி, ஊரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அச்சரக காவல் உதவி ஆணையா் நவீன்குமாரிடம் வழங்கப்பட்டன.
இதில் பேரமைப்பின் மாவட்டச் செயலாளா் லாலா கணேசன், பொருளாளா் குமரன், மாநகரச் செயலாளா் சையது அப்பாஸ், இணைச்செயலாளா் பாஷா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...