கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் தனியாா் மருத்துவமனைகளைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 10:22 pm

DIN

திருப்பூரில் தனியாா் மருத்துவமனைகளைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அனைத்திருந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.சதாம் உசேன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றோா் கூறியதாவது:

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்தக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. மேலும், கரோனா தடுப்பூசிகளை தேவைக்கு ஏற்ப மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல,18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சங்கீதா, 3ஆவது மண்டலக் குழு தலைவா் எம்.தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் ரவிச்சந்திரன உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அதேபோல, திருப்பூா் முதலாவது மண்டலம் சாா்பில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அனுப்பா்பாளையம் பேருந்து நிலையம் பகுதியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளா்கள் எஸ்.செல்வராஜ், ஜி.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.