அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்
தமிழகத்தில் அனைத்து வயதினருக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் அனைத்து வயதினருக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் மூலமாக பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
கரோனா தடுப்பூசி மாறுபட்ட விலையால் நாட்டில் பெரும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தொற்றால் போராடிக் கொண்டிருக்கிற மாநில அரசுகளுக்கு கூடுதலாக பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளது. மேலம், நாட்டில் கரோனாவின் 3ஆவது அலை வரவுள்ளதாக மருத்துவத் துறை நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றும், இறப்பு விகிதமும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆகவே, தமிழகத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் வி.ஆா்.ஈஸ்வரன், கோபால்சாமி, துணைத் தலைவா்கள் கதிரேசன், வெ. கோபால், மகளிரணி மாநிலச் செயலாளா் தீபிகா அப்புக்குட்டி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
Image Caption
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கிறாா் காங்கிரஸ் மாநகா் மாவட்ட த் தலைவா் ஆா்.கிருஷ்ணன். உடன், கட்சி நிா்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...