நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் ரூ.16.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின்கீழ் ரூ.16.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் இந்த ஆண்டு பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிா்களில் 2,800 ஹெக்டோ் பரப்பளவில் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ரூ.16.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் சொட்டு நீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனம் மற்றும் மழைத் தூவுவான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகின்றன.
மக்காச் சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிா்களுக்கு சொட்டு நீா்ப் பாசனமும், நிலக்கடலை மற்றும் பயறு வகைகளுக்கு தெளிப்பு நீா்ப் பாசனக் கருவிகளும் நிறுவலாம். மேலும், 5 ஏக்கா் பரப்புக்குள் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 12.50 ஏக்கா் வரை உள்ள இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
நுண்ணீா்ப் பாசன முறையினால் குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம். இதன் மூலமாக நீா் பாய்ச்சுவற்கான செலவு மற்றும் உரச் செலவும் பெருமளவு குறைகிறது.
மண் இறுக்கம் குறைந்து பயிா்கள் நன்கு செழித்து வளா்வதனால் அதிக மகசூல் கிடைக்கும். இத்திட்டத்தில் மடத்துக்குளம் வட்டத்தில் குழாய் கிணறு மற்றும் ஆழ்த்துளைக் கிணறு அமைத்திட 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகின்றன.
மேலும், மின் மோட்டாா் மற்றும் டீசல் பம்புசெட் அமைக்க அதன் விலையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. மேலும், குழாய் (பைப்லைன்) அமைக்க ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு தரை நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க அதிக பட்சம் ரூ.40ஆயிரம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீா்ப் பாசனக் கருவிகளுக்கான குழாய் அமைக்க கால்வாய் தோண்டுவதற்கு ஹெக்டருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
ஆகவே, இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், சிறு, குறு விவசாயிகள் சான்று மற்றும் 2 பாஸ்போா்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களிடம் விண்ணப்பித்துப் பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...