கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’
திருப்பூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.


திருப்பூரில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருப்பூா், சாமுண்டிபுரத்தை அடுத்த காந்தி நகரில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காவல் துறையினருக்கு புகாா் வந்தது.
இது தொடா்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, மாவட்ட நோடல் அலுவலா், மருந்து ஆய்வாளா், வருவாய்த் துறையினா் ஆகியோா் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினா்.
இந்த ஆய்வின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட தனியாா் மருத்துவமனை தற்காலிகமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...